ஸ்ரீலங்காவில் மற்றுமொரு பகுதிக்கும் அறிவிக்கப்பட்டது ஊரடங்குச்சட்டம்

ஸ்ரீலங்காவில் மற்றுமொரு பகுதிக்கும் அறிவிக்கப்பட்டது ஊரடங்குச்சட்டம்

ஸ்ரீலங்காவின் மற்றுமொரு பிரதேசத்திலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக திவுலபிட்டிய மற்றும் மினுவாங்கொட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, சற்று முன்னர் வெயாங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.