திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி!
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் பணியாளரின் 16 வயதான பிள்ளைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு தேசிய தொற்றுநோய்த் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மினுவாங்கொட பிரதேசத்தில் 600 நபர்களும் 150 தனிப்பட்ட நபர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்……