சர்ச்சைக்குரிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இலங்கை

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இலங்கை

சர்ச்சைக்குரிய வெளிநாட்டுக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்திற்கே அனுப்பப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன,

சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

2017ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகை கொள்கலன்களில் கழிவுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

மொத்தம் 21 கொள்கலன்கள் சனிக்கிழமையன்று இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் 42 கப்பல் கொள்கலன்களை மலேசியா இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.