பிரதமர் மோடியின் பலே திட்டம்! அலறியடித்துக்கொண்டு சீனா வெளியிட்டுள்ள அவசர அறிக்கை

பிரதமர் மோடியின் பலே திட்டம்! அலறியடித்துக்கொண்டு சீனா வெளியிட்டுள்ள அவசர அறிக்கை

இந்திய - சீனாா எல்லை மோதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று லடாக் சென்றுள்ள நிலையில், சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இன்று அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“மோதல் போக்கை அதிகரிக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது” என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பதட்ட நிலையை குறைப்பதற்கு ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தைக்கு தேவையான தொடர்பு வசதிகளை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.

எந்த ஒரு தரப்பும் தற்போதுள்ள நிலையை மேலும் தூண்டுவதை போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நரேந்திரமோடியின் லடாக் விசிட் என்பது சீனாவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவம் சீன ராணுவத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடியே அங்கு நேரடியாக சென்றிருக்க கூடும் என்றும் சீனா அச்சப்படுகிறது

சீன ராணுவத்தினர் லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிவிப்புமின்றி லடாக் பகுதிக்கு நேற்று விரைந்தார்.

இது தொடர்பாக புகைப்படங்களை நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.. மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்று கூறும் சீனா, ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் கூட, மற்றொரு பக்கம் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இப்போது இந்திய பிரதமர் லடாக் பகுதிக்கு விரைந்துள்ள நிலையில், அலறியடித்துக்கொண்டு இப்படி ஒரு அறிக்கையை சீனா வெளியிட்டு உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.