யாழில் 4 நாட்களாக காணாமல் போனவர் வல்லை வெளி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு!!

யாழில் 4 நாட்களாக காணாமல் போனவர் வல்லை வெளி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு!!

யாழில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு .வீட்டிலிருந்து வெளியேறியவரை 4 நாட்களாக காணவில்லை என்ன அவர்களுடைய பிள்ளைகள் தேடி அலைந்த நிலையில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்கள். இன்று கிடைக்கப்பட்ட தகவலின்படி வல்லை வெளியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. நெல்லியடி பொலிசார் அங்கு சென்று பார்த்த பொழுது செல்வக்குமார் உடைய சடலம் என அடையாளம் காட்டப்பட்டது. அவர் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளும் அவருக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது சடலம் மரண விசாரணைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மரண விசாரணை நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.