கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்ற இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
நீர்கொழும்பு செத்தபாடு கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
7 இளைஞர்கள் குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் நீராட சென்ற நிலையில் அவர்களில் மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.
அவர்களில் இரண்டு பேர் தலவாக்கலையை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் பதுளை நமுனுகுலயை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளது.
இந்தநிலையில் 3 இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.