கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நிலையில், நான் இதில் கலந்துக் கொள்ள வில்லை என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி (நாளை) முதல் ஒளிப்பரப்பாகிறது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்கானது.
லீக்கான பட்டியலில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ஆர்ஜே அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள் பெயர் இடம் பெற்றது. மேலும் நிகழ்ச்சி ஆரம்பித்து சில நாட்களில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக பாடகர் வேல்முருகன், நடிகை காயத்ரி செல்ல இருப்பதாவும் கூறப்பட்டது.
இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகள் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், நடிகை காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.
நடிகை காயத்ரி, விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.