சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார்.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘சூரரைப் போற்று படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. பின்னணி இசை பணிகள் முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.