திருகோணமலை - கோணேஸ்வரர் ஆலயத்தை அண்டிய பகுதியில் மீட்கப்பட்ட சடலம்! தீவிர விசாரணையில் பொலிஸார்
திருகோணமலை - கோணேஸ்வரர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் நபரொருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்திருந்த நிலையில் கோணேஸ்வரர் ஆலய சூழலில் உள்ள கற்பாறையின் மீது விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதன் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.