ஸ்ரீலங்காவில் நடுத்தர குடும்பத்தின் சராசரி வருவாயை அதிகரிக்க புதிய திட்டம்

ஸ்ரீலங்காவில் நடுத்தர குடும்பத்தின் சராசரி வருவாயை அதிகரிக்க புதிய திட்டம்

ஸ்ரீலங்காவில் ஒரு குடும்பத்தின் சராசரி வருமானத்தை அதிகரிக்கும் புதிய திட்டம் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளார்.

வெள்ளவத்தையில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய பிரேமதாச,

பெண்களின் தொகையை அடிப்படையாக வைத்தே இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வீட்டு அடிப்படையிலான தொழில்களுக்கு சலுகை விகிதத்தில் கடன்களை வழங்குவதன் மூலம், எதிர்காலத்தில் படிப்படியான முன்னேற்றம் எற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த முயற்சியின் மூலம் ஆறு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையவுள்ளனர்.

நடுத்தர வருமானம் பெறும் குடும்பத்திற்கு கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.