கொரோனா பாதிப்பை கண்டறிய இதுவரை 7.78 கோடி சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 11.32 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றை விரைவில் கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக, பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

 

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.78 கோடியாக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 7,78,50,403 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11,32,675 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.