பிரதமரிடம் சிறுவன் கொடுத்த கடிதம் - மஹிந்தவின் உடனடி நடவடிக்கை
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சிறுவன் ஒருவன் கொடுத்த கடிதத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார்.
பிரதமர் நேற்று முன்தினம் நாரஹென்பிட்டி விகாரைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் சிறுவன் ஒருவர் அவருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
தங்களுக்கு வீடு இல்லை என்றும், புதிய வீடு ஒன்றினை பெற்றுத் தருமாறும் சிறுவன் கொடுத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த கடிதத்திற்கு உடனடியாக பதில் வழங்கிய பிரதமர், வீடு ஒன்றை பெற்று தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
கடிதத்தை வாசித்ததன் பின்னர் பிரதமர் அந்த சிறுவனுடன் வந்த தாயை அழைத்து, வீட்டு அதிகார சபையின் தலைவரை சந்திக்குமாறு கூறியுள்ளார்.