எனது நண்பன் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டுவர விரும்புகிறேன்- மோடி

எனது நண்பன் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டுவர விரும்புகிறேன்- மோடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டுமென மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள மோடி, “எனது நண்பன் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாரியார் மெலனியா ட்ரம்ப் இருவரும் விரைவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுவரவும் சிறந்த ஆரோக்கியம் பெறவும் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்ஸ்-இற்கு (Hope Hicks) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ட்ரம்ப், மெலனியா ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.