இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுற்றுலாப் பயணிகள்

அதற்கமைய 2026 ஆம் ஆண்டில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள் | Tourist Arrivals Surpass 1 5 Mn In 2026

2026 ஜனவரி 1 ஆம் திகதிக்கும் ஆகஸ்ட் 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 1,498,749 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் 36,590 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.

இக்காலப்பகுதியில் பதிவான மொத்த வருகையில் இவர்கள் சுமார் 24% பங்கைக் கொண்டுள்ளனர்.

 

முதன்மைச் சந்தை

16,688 வருகைகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், சீனா 10,294 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.

ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 23 வரையான காலப்பகுதியில் 374,820 வருகைகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த முழு ஆண்டுக்கான முதன்மைச் சந்தையாகவும் இந்தியா தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

அதே காலப்பகுதியில், 147,089 வருகைகளுடன் பிரித்தானியா அடுத்த இடத்திலும், 98,801 சுற்றுலாப் பயணிகளுடன் சீனா அடுத்த இடத்திலும் உள்ளன.