ஹட்டன் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு..

ஹட்டன் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு..

ஹட்டன் - போடைஸ் பகுதியில் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

அவர்களில் ஒருவர் மேலதிக சிசிச்சைகளுக்காக கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

டயகமயில் இருந்து இன்று காலை ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் ஹட்டன் - டயகம வீதி சேதமடைந்த நிலையில் காணப்படுதாக அந்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.