கட்டான கொள்ளை - நான்கு சந்தேகநபர்கள் கைது

கட்டான கொள்ளை - நான்கு சந்தேகநபர்கள் கைது

கடந்த தினம் கட்டான பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 7.2 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி 6 பேர் அடங்கிய கும்பல் துப்பாக்கியை காட்டி இந்த கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர்.

கொள்ளை சம்பவம் இடம்பெறும் போது வீட்டில் தந்தை, தாய், மகள், மகன் மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்துள்ளனர்.

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

நீல நிற கார் மற்றும் மோட்டார் சைக்களில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.