20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மூன்றாவது நாளாகவும் இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி 2 ஆவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுக்கள் மீதான பரிசீலனையை இன்று (02) வரையில் ஒத்திவைத்து நீதிபதி குழாம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த மனுக்கள் மீதான பரீசிலனை இன்று (02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.