கட்டுநாயக்க விமான நிலையத்தால் பேரிழப்பு -வருமானம் முற்றாக முடக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தால் பேரிழப்பு -வருமானம் முற்றாக முடக்கம்

கொரோனா தொற்றை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு ரூ .9 பில்லியனைத் தாண்டியுள்ளதாக விமான நிலையம் மற்றும் சிவில் விமான சேவைகள் துணைத் தலைவர் ராஜீவ் சூரியராச்சி சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

சராசரி லாபம் தற்போது ரூ .15 பில்லியனாக இருக்க வேண்டும் , ஆனால் இந்த ஆண்டு லாபம் ரூ .600 மில்லியனாக வரையறுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்..

விமானசேவை செயற்பாடுகள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சரக்கு விமானங்களின் செயற்பாடு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டதால் நாடு பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ளது என்றார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் நாற்பத்தைந்து சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வருகிறார்கள், ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது மிக அதிகமாக இருப்பதால் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த நேரத்தில் இலங்கைக்கு வருவதற்காக விமான நிலையத்தைத் திறக்க முடியாது என்று அவர் கூறினார்.

எனினும், நாட்டின் சுகாதார அதிகாரிகளுடன் வழக்கமான கலந்துரையாடல்கள் இருந்தபோதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தை முழுமையாக திறப்பதற்கான திகதியை அறிவிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.