உலக சிறுவர் தினத்தை பள்ளி மாணவர்களுடன் கொண்டாடினார் ஜனாதிபதி

உலக சிறுவர் தினத்தை பள்ளி மாணவர்களுடன் கொண்டாடினார் ஜனாதிபதி

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐந்து பாடசாலைகளுக்கு நடமாடும் நூலகங்களை வழங்கி வைத்துள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் மேம்பட வேண்டும். இவை குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என அண்மையில் கிராமங்களை நோக்கிய பயணத்தின் போது ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

அந்த வகையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு நூலக வசதிகள் தொடங்கப்பட்டன.

உலக சிறுவர் தினத்தை குறிக்கும் அக்டோபர் 1 ம் திகதி "வாசிப்பு மாதம்" தொடங்குகிறது.

அந்த வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (01) ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளை ஜனாதிபதி செயலகத்திற்கு வரவழைத்து நூலகங்களை வழங்கினார்

சேவையிலிருந்து ஒதுக்கப்பட்ட பழைய பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் நூலகங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு முழுமையான நூலகத்தின் விலை சுமார் ஒரு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.