முச்சக்கரவண்டியில் வைத்து பெண் ஒருவருடன் 2 ஆண்கள் கைது

முச்சக்கரவண்டியில் வைத்து பெண் ஒருவருடன் 2 ஆண்கள் கைது

முச்சக்கரவண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் அக்கரைப்பற்று ஒலுவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 25 கிராம் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக கருதப்படும் 19 ஆயிரம் ரூபாய் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்ட பாலமுனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (01) அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், அக்கறைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.