இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில், நேற்று மணமகனுக்கு நேர்ந்த பரிதாபம்

இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில், நேற்று மணமகனுக்கு நேர்ந்த பரிதாபம்

நேற்றைய தினம் (14) களுத்துறை கடலில் நீராடச் சென்ற 6 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு பலியானதோடு, இன்றைய தினம் (15) குறித்த இளைஞனுக்கு திருமணம் நடைபெறவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த நபரைத் தேடும் பணியை தற்போது கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

 

களுத்துறை-ரஜவத்த பகுதியில் வசித்து வந்த லஹிரு கசுன் என்ற நபரே இவ்வாறு கடுகுருந்த கடலுக்கு நீராடச் சென்று உயிரிழந்துள்ளார்.

 

5 பேருடன் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற போது திடீரென இவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பின்னர் இவருடன் நீராடச் சென்ற நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல்கள் வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது காவல்துறையும் இலங்கை கடற்படையும் காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.