காலி கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முக்கிய பொருள்
உலக பாரம்பரிய தளமாகக் கருதப்படும் காலி கோட்டையில் பண்டையகால மதிப்புள்ள நிலக்கரியின் ஒரு அடுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் மத்திய மாகாண திட்ட பணிப்பாளர் கலாநிதி நிலன் கூரே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது 'கருங்கோட்டையில்' சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்ட தளத்தில் இந்த நிலக்கரி அடுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலாநிதி நிலன் கூரே கூறுகையில்,
"இது ஆயுதங்களை தயாரிப்பதற்கான இடமாக பயன்படுத்தப்பட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த நோக்கத்திற்காக நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. புகைகளால் சுவர்கள் கருகிவிட்டன. அதனால்தான் 'கருப்புக் கோட்டை' என்ற பெயர் உருவாக்கப்பட்டது. "
இந்த நிலக்கரி எந்த காலத்துக்குரியது என எவ்வித காலமும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், இது போர்த்துகீசிய மற்றும் டச்சு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
"நிலக்கரி இலங்கையில் இல்லை, எனவே இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். வரலாற்று ரீதியாக, இது போர்த்துகீசியம் அல்லது டச்சு காலங்களைச் சேர்ந்ததாகத் தெரிகிறது."
அதன்படி, இந்த நிலக்கரி துண்டுகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை கண்டுபிடிக்க எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.