வீதியில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் சேர்த்த இளைஞன்; யாழில் நெகிழ்ச்சி சம்பவம்

வீதியில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் சேர்த்த இளைஞன்; யாழில் நெகிழ்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணத்தில் வீதியில் விழுந்து கிடந்த தங்க நகையை எடுத்துச் சுன்னாகம் பொலிஸார் மூலம் உரியவரிடம் சேர்த்த இளைஞனின் நேர்மையான செயல் சமூகத்தில் பாராட்டைப் பெற்று வருகிறது.

நேற்று சுன்னாகம் பகுதியில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக தங்க ஆபரணம் ஒன்று கீழே விழுந்து காணப்பட்டுள்ளது.  

அதனை குப்பிளான் பகுதியைச் சேர்ந்த செல்வராசா பார்த்தீபன் என்பவர் கண்டெடுத்து, உடனடியாக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி, அந்த நகையின் உரிமையாளரான ஏழாலை பகுதியைச் சேர்ந்த முதியவரை கண்டுபிடித்தனர்.

பின்னர், அந்த முதியவரை அழைத்து, பார்த்தீபனின் கையாலேயே தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீதியில் கிடைத்த நகையை நேர்மையுடன் திருப்பி வழங்கிய பார்த்தீபனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.