சகோதரியின் திருமணத்தில் பலியாகிய இளைஞன் : பரிதவிக்கும் குடும்பம்
மஸ்கெலியா புரஸ்விக் இராணி தோட்டப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிந்து புகுந்த வீடு சென்ற தன் சகோதரியை, பிறந்த வீட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க தமது வீட்டிற்கு வந்த போதே விபத்து சம்பவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.