நீங்கள் இந்த இராசியா? பௌர்ணமி தினமன்று இதை மட்டும் செய்யுங்கள்: அப்புறம் நீங்கள் தான் ராஜா...

நீங்கள் இந்த இராசியா? பௌர்ணமி தினமன்று இதை மட்டும் செய்யுங்கள்: அப்புறம் நீங்கள் தான் ராஜா...

சந்திரன் மனோகாரகன் என்பதால் மனதை ஆள்பவனாக இருக்கிறான். இதனால் பௌர்ணமி நாளில் மனதில் உறுதி இல்லாத மனிதர்கள் தன்னம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனதை மாற்றிக் கொள்ள சந்திரனை வணங்கலாம்.

சந்திரன் அன்னையின் அம்சமாக பார்க்கப்படுவதால் பௌர்ணமி வழிபாடு அம்பாளின் வழிபாடாக கருதப்படுகிறது. இந்த நாளில் எந்த இராசிக்காரர்கள்? என்ன செய்ய வேண்டும்? அப்படி செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு பௌர்ணமி வரும் கிழமைகளில் ஒவ்வொரு சிறப்பான அம்சங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அதாவது ஞாயிறு, திங்கள் முதலான ஒவ்வொரு ஏழு கிழமைகளும் பௌர்ணமி வரும் நாளில் சிறப்பான பலன்கள் உண்டு. அந்த நாள்களில் யார் யார் என்ன செய்யலாம்?

ஞாயிற்றுக்கிழமையில் பௌர்ணமி வந்தால் அது சூரியனுக்கு ஏற்றதாகும். சூரியதோஷம் உள்ளவர்களுக்கு, சூரியனால் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் உத்திரம், உத்திராடம், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள் ஆகியோர் அம்மனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் வாழ்வில் யோகம் உண்டாகும். சகல பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை. இராசி, நட்சத்திரம் தெரியாத 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும் இந்த பரிகாரம் செய்யலாம்.

திங்கள்கிழமையில் வரும் பௌர்ணமி நாளில் சந்திரதிசை உள்ளவர்கள், கடக ராசிக்காரர்கள், திருவோணம், அஷ்டம், ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிற அல்லது செவ்நிற வஸ்திரம் சாற்றி மல்லிகை பூவால் அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் சங்கடங்கள் தீர்ந்து சுபகாரியங்கள் கைகூடும். வெளிநாடு செல்வதில் தடை இருந்தால் தீரும். வாழ்வில் சகல செல்வ வளங்களும் பெறுவார்கள். இராசி, நட்சத்திரம் தெரியாத 2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

செவ்வாய்க கிழமை வரும் பௌர்ணமி நாளில் முருகப் பெருமானுக்கு மற்றும் அங்காரகனுக்கு உகந்த தினமாகும். எனவே இந்த நாளில் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரக்காரர்கள், மேஷம் மற்றும் விருச்சிக இராசிக்காரர்கள், செவ்வாய் தோஷம், செவ்வாய் திசை நடப்பவர்கள் துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்துவந்தால் அத்தனை எதிர்ப்புகளும் நீங்கும். செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். நட்சத்திரம் மற்றும் இராசி தெரியாத 9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

புதன்கிழமையில் வரும் பௌர்ணமி நாளில் புதன் திசை நடப்பவர்கள், புதன் பகவான் வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும். மேலும் மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் சிறந்த அறிவாற்றல் மற்றும் ஞாபகத்திறன் பெறவும், உறவுகள் பலப்படவும் துர்க்கை அம்மனுக்கு இந்த தினத்தில் பச்சை நிற வஸ்திரம் சாற்றி முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் சகல யோகங்களும் வாழ்வில் பெறுவார்கள். இராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் 5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வியாழக்கிழமையில் வரும் பௌர்ணமி நாளில் குரு பகவானை வணங்க தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் பெருகும். குருவை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாளாக இந்நாள் இருக்கும். இந்த நாளில் குரு திசை நடப்பவர்கள், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்கள், துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து, தயிர் சாதம் மற்றும் மஞ்சள் நிற பழங்கள் நிவேதனம் வைத்து வழிபட வேண்டும்.

அவ்வாறு வழிபட்டால் சகல வளங்களும் பெறுவார்கள். பொன் பொருள் சேரும். மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் உயரும். இராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் 3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வெள்ளிக்கிழமையில் வரும் பௌர்ணமி நாளில் சுக்ரனுக்கு உகந்த தினமாக பார்க்கப்படுவதால் களத்திர தோஷம் இருப்பவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சுக்கிர திசை நடப்பவர்கள், ரிஷபம், துலாம் இராசிக்காரர்கள் மற்றும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள், 6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, கதம்ப மாலை அணிவித்து, மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து, பழங்களை நிவேதனம் வைத்து வழிபட வேண்டும்

அவ்வாறு செய்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெறும். வாழ்வில் சகல வளங்களும் பெறுவார்கள்.

சனிக்கிழமையில் வரும் பவுர்ணமி பௌர்ணமி சனீஸ்வரரை வணங்குவதற்கு ஏற்ற தினமாக உள்ளது. சனியும், பௌர்ணமியும் இணைந்தால் சனியால் ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் நீங்கும். சனி திசை நடப்பவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், மகரம் மற்றும் கும்ப இராசிக்காரர்கள் துர்க்கை அம்மனுக்கு நீல நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் தீராத ஆரோக்கிய பிரச்சனைகள் விரைவாக தீர்ந்துவிடும். மனதில் உற்சாகம் பிறக்கும். நவக்ரஹ தோஷங்களும் விலகும். துன்பங்களிலிருந்து விடுபட 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.