ராஜித்த சேனாரத்விற்கு மீண்டும் அழைப்பாணை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அவரை எதிர்வரும் 05 ஆம் திகதி அங்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வுப் பிரிவு கொமாண்டர் சுமித் ரணசிங்க ஆணைக்குழுவில் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைத்தமை, அரசியல் அழுத்தங்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கொமாண்டர் சுமித் ரணசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த முறைப்பாட்டில் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.