
மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானி கடத்தல்: பிக்பாஸ் பெண் போட்டியாளர் கைது!
மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானியை கடத்தி வைத்துக் கொண்டு அவருடைய மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டிய பிக்பாஸ் பெண் போட்டியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பை சேர்ந்த 35 விஞ்ஞானி ஒருவர் சமீபத்தில் மசாஜ் செய்வதற்காக ஒரு மசாஜ் சென்டரை தொலைபேசியில் அணுகியுள்ளார். இதனை அடுத்து அவரை ஒரு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி சுனிதா என்பவர் மொபைல் போனில் பதிலளித்துள்ளார். சுனிதா சொன்ன இடத்திற்கு இளம் விஞ்ஞானி சென்றபோது அந்த விஞ்ஞானியை சுனிதா, ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, அவரது மனைவியிடம் தொலைபேசியில் அழைத்து ரூபாய் 10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளதாக தெரிகிறது
இது குறித்து விஞ்ஞானியின் மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விஞ்ஞானியின் மனைவியுடன் மாறுவேடத்தில் காவல்துறையினர் சுனிதா குறிப்பிட்டு சொன்ன இடத்திற்கு சென்றனர். விஞ்ஞானியின் மனைவியை மட்டும் பணத்துடன் அனுப்பிவிட்டு போலீசார் மறைந்து இருந்த போது பணத்தை வாங்க வந்த சுனிதா அதிரடியாக போலீசாரிடம் பிடிபட்டார். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்
சுனிதாவிடம் நடத்திய விசாரணையில் அவர் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் சுனிதாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது