இவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா? லீக்கான இறுதி பட்டியல்!

இவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா? லீக்கான இறுதி பட்டியல்!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் நான்காம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டது. இதற்கான புரோமோ வீடியோக்கள் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வந்தோம். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்காகி உள்ளது.

நாம் ஏற்கனவே தெரிவித்தபடி இந்த நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை ரம்யா பாண்டியன், ஆர்ஜே அர்ச்சனா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் புதிதாக தற்போது விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேற்கண்ட பெண் போட்டியாளர்கள் தவிர ஆண் போட்டியாளர்களாக பாடகர் ஆஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், ,நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் இறுதிப்பட்டியல் இதுதான் என்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று சீசன்கள் போலவே இந்த சீசனையும் மேற்கண்ட போட்டியாளர்கள் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் கொண்டு செல்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.