இறப்பதற்கு முன் SPB பாடிய கடைசி பாடல் இதுவா..? வெளியான காணொளி இதோ..!

இறப்பதற்கு முன் SPB பாடிய கடைசி பாடல் இதுவா..? வெளியான காணொளி இதோ..!

வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல்தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், அவர் ரஜினியின் அண்ணாத்தே படத்திற்காகவும் டி.இமான் இசையமைப்பில் பாடலொன்று பாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா உலகை நிலைகுலையச் செய்துள்ளது. தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள் என எழுதியுள்ளார் வைரமுத்து இந்த பாடல்தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா கரோனா கரோனா, கரோனா கரோனா கரோனா

அணுவை விடவும் சிறியது, அணுகுண்டை போல் கொடியது

அணுவை விடவும் சிறியது அணுகுண்டை போல் கொடியது

சத்தமில்லாமல் நுழைவது யுத்தமில்லாமல் அழிப்பது

கரோனா கரோனா கரோனா

தொடுதல் வேண்டாம், தனிமை கொள்வோம் தூய்மை

என்பதை மதமாய் செய்வோம்

கொஞ்சம் அச்சம் நிறைய அறிவு

இரண்டும் கொள்வோம் இதையும் வெல்வோம்

எத்தனை போர்கள் மனிதன் கண்டான்

அத்தனை போர்களிலும் அவனே வென்றான்

எத்தனை போர்கள் மனிதன் கண்டான்

அத்தனை போர்களிலும் அவனே வென்றான்

கரோனாவையும் கொன்று முடிப்பான்

கொள்ளை நோயை வென்று முடிப்பான்

கரோனாவையும் கொன்று முடிப்பான்

கொள்ளை நோயை வென்று முடிப்பான்

நாளை மீள்வாய் தாயகமே

நாளைய உலகின் நாயகமே

கரோனாவையும் கொன்று முடிப்பான்

கொள்ளை நோயை வென்று முடிப்பான்

இதே போல தெலுங்கிலும் கொரோனா பற்றி எழுதப்பட்டுள்ள விழிப்புணர்பு பாடலையும் பாடியுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். இந்த பாடல்களை அழகாக ட்யூன் போட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக வெளியிட்டார் எஸ்.பி பாலசுப்ரமணியம்.

இறுதியில் கொரோனா அவரையும் விடவில்லை. கொரோனா தொற்றிக்கொண்டதன் பின்னர் அதிலிருந்து மீண்ட எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு, உடல் நலம் ஒத்துழைக்காத காரணத்தினால் மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொள்ள சென்றுவிட்டார்.

பாடும் நிலா மறைந்தாலும் நிலா பாடிய பாடல்கள் என்றுமே காற்றோடு கலந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.