கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வாழ்த்து!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வாழ்த்து!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை சர்வதேச ரீதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமது பேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் Yicai Global நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையின்படி,  கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தல், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது.

இதன்படி,  நாட்டின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் முறையான வள மேலாண்மை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் கிடைக்கப்பெற்ற இந்த சாதனைக்கு அதிகாரிகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.