கொரோனா வைரஸ் அச்சம் – மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் அச்சம் – மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 97 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் கட்டாரில் இருந்து 73 பேரும் 24 பேர் அபுதாபியில் இருந்தும் இன்று காலை விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.