சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான வழி பாலியல் கல்வி – அலி சப்ரி

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான வழி பாலியல் கல்வி – அலி சப்ரி

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பாலியல் கல்விதான் முன்னோக்கிய வழி என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அலி சப்ரி மேலும் கூறியுள்ளதாவது, “குழந்தைகளின் உரிமைகள் என்ன, வரம்புகள் என்ன என்பதை நாங்கள் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகத்தை கையாள்வது, மூன்று செயல்முறைகள் மூலம் செய்யப்பட வேண்டும்.

சமூக நீதி, பாதுகாப்பு, பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் கல்வி மற்றும் நல்ல சட்ட நிர்வாகம் மற்றும் சட்ட தீர்வுகளை அமுல்படுத்துதல்.

பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குறித்து, கல்வி அமைச்சுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் பார் அசோசியேஷனில் இருந்தபோது, ​​மாணவர்களுக்கு சட்டம் கற்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வாதிட்டோம். O / L மற்றும் A / L மாணவர்களுக்கு சட்டத்தை ஒரு பாடமாக சேர்க்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சில பாலியல் கல்வி, குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது. அநேகமாக தரம் 6 முதல் அல்லது குறைந்தபட்சம் தொடங்குவதற்கு ஏதேனும் வழியுள்ளதா என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.