யாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

யாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரை வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் என்று பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.