யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய் ; மகனுக்கு காத்திருந்த பேரிடி

யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய் ; மகனுக்கு காத்திருந்த பேரிடி

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி - கலாசாலை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய் ; மகனுக்கு காத்திருந்த பேரிடி | Family Woman Death In Jaffnaசம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த தாய் கழிப்பறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் மகன் அவரை தேடிச்சென்று பார்த்தவேளை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.