முச்சக்கரவண்டியை சூட்சுமமான முறையில் கடத்த முயன்ற ஜோடிக்கு நேர்ந்த கதி
முச்சக்கர வண்டியொன்றில் வாடகைக்கு பயணித்த தம்பதியொன்று குறித்த முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்ட சம்பவமொன்று ஹெம்மாதகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (28) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெம்மாதகம நகரில் இருந்து முச்சக்கரவண்டியொன்றில் குறித்த தம்பதிகள் கிங்கராஜ பிரதேசத்திற்கு வாடகைக்கு பயணம் செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் உள்ள ஒரு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சாரதியின் கண்களுக்கு மிளகாய் தூளினால் தாக்குதலை மேற்கொண்டு கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு முச்சக்கர வண்டியை கடத்த முயன்றுள்ளனர்.
இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரதி கூச்சலிட்டதைத் தொடர்ந்து வாகனத்தை கடத்த வந்த தம்பதியினர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் 22 மற்றும் 28 வயதுடைய மாவனல்லை, தனமல்வில பகுதியில் வசித்து வருபவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.