ஸ்ரீலங்காவில் விசேட தேடுதல் -47 வெளிநாட்டவர்கள் கைது

ஸ்ரீலங்காவில் விசேட தேடுதல் -47 வெளிநாட்டவர்கள் கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 47 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசா காலத்தை நிறைவு செய்த நிலையில் தங்கியிருந்த வேளையே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சுமார் 1500 சந்தேக நபர்களில் அவர்களும் அடங்குவர்.

இந்த பொலிஸ் நடவடிக்கையில் மொத்தம் 1481 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விசாக்கள் காலாவதியான நிலையில் கைது செய்யப்பட்ட 47 வெளிநாட்டவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்றய சந்தேக நபர்களில் 514 பேர் போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், மேலும் 326 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.