பிரித்தானியா உள்துறை செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

பிரித்தானியா உள்துறை செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாட்டிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவை பிரித்தானியா உள்துறை செயலாளர் பிரிதி படேல் மற்றும் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ஆகியோர் ஆதரித்துள்ளனர். இது சுற்றுலா பயணிகளின் வருகையை பாதிக்கக்கூடும் என்று பயண மற்றும் சுற்றுலா தொழில்துறையினர் நம்புகின்றனர். திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் இந்தக் கொள்கைக்கு எதிராக விமான நிறுவனங்களும் சுற்றுலா நிறுவனங்களும் பிரச்சாரம் செய்து வருகின்றன. சில அரசாங்க அதிகாரிகளும் புதிய விதிகளை விமர்சிக்கின்றனர். எவ்வாறாயினும், படேல் மற்றும் ஷாப்ஸ், இதில் தவறு ஏற்பட்டால் பிரித்தானியா பாதிக்கப்படும், அதனால்தான் இந்த நடவடிக்கைகளை இப்போது அறிமுகப்படுத்துவது முக்கியம் என்று எச்சரித்தனர். இறந்த ஆயிரக்கணக்கானோருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த கொடிய வைரஸைக் கையாள்வதில் நமது திட்டங்களை கைவிட வேண்டாம். நாம் வெளிநாடு செல்லவும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வரவும் பாதுகாப்பாக இருக்கும்போது மற்ற நாடுகளுடன் எவ்வாறு ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்த முடியும் என்பதை அறிய போக்குவரத்துத் துறையுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.