வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் நிர்வாக முடக்கல் போராட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் நிர்வாக முடக்கல் போராட்டம்

தமிழ் தேசிய கட்சிகளின் தீர்மானத்திற்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 10 தமிழ் தேசிய கட்சிகள் நேற்று முன்தினம் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடு;த்து இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது

எவ்வாறாயினும் வடக்கு மாகாணத்திலுள்ள அரச நிறுவனங்கள் வழமை போன்று இயங்குவதாக எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

வட மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் முழுமையான நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்படவில்லை .