நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 11 பேருக்கு கொவிட் 19 தொற்றுறதியானது.

இந்தியாவலிருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி ஒருவருக்கும்; நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

அத்துடன் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 22 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

இதற்கமைய தொற்றுறுதியான 3 ஆயிரத்து 208 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

அதேநேரம் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 139 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.