மீண்டும் அரசியல்வாதியாகும் சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது அடுத்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் வெளியான வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.

 

இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக செல்வராகவனின் ‛என்ஜிகே’ படத்தில் சற்று வில்லத்தனம் கலந்த அரசியல்வாதியாக சூர்யா நடித்திருந்தாலும், இப்படத்தில் பாண்டிராஜ் வேறுவிதமான அரசியலை கையாள இருக்கிறாராம். நடிகர் சூர்யா ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.