தனுஷ், சிவகார்த்திகேயன் பட இயக்குனர் துரை செந்தில்குமார் வீட்டில் பெரிய சோகம் நடந்துள்ளது.
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த படம் 'எதிர்நீச்சல்'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து 'காக்கிச்சட்டை' படத்தை இயக்கினார். மேலும் தனுசை வைத்து கொடி', 'பட்டாஸ்' போன்ற படங்களை இயக்கினார்.
இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமாரின் தந்தை செல்வகுமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67. இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெறவுள்ளது.
தந்தையை இழந்து வாடும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.