டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் பலி..!

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் பலி..!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்தனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களை காட்டிலும் இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் தொடர்ந்தும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஆகவே பொதுமக்கள் அது தொடர்பில் விழிப்புணவர்வுடன் செயற்பட வேண்டும்