
இலங்கை வந்த ரஷ்ய நாட்டவர் திரும்பிச் செல்ல அனுமதி
மாத்தறை - பொல்ஹேன பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என கூறப்பட்ட நபர் மீண்டும் ரஷ்யாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என முன்னர் கூறப்பட்ட போதும், இறுதியில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில் குறித்த நபரை மீண்டும் ரஷ்யாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ரஷ்ய நாட்டவர் தங்கியிருந்த ஹோட்டலின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சுதத் சமரவீர தெரிவித்தார்.
எனினும் ஹோட்டல் ஊழியர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் சுதத் சமரவீர கூறினார்.