எஸ் பி பிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் -நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கூகுள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி பகிரப்பட்டுள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய என்று தேடியந்திரத்தில் தேடினால் அதன் கீழ் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என எஸ்பிபி பாடிய பன்மொழிப் பாடல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இது ஸ்கிரீன்ஷொட் எடுக்கப்பட்டு, கூகுள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி பகிரப்பட்டுள்ளது.
இதனுடன், 40,000 பாடல்கள், 15 மொழிகள், ஒரு குரல், இது இசையைத் தனது மொழியாக்கிய சகாப்தத்துக்கு எங்கள் அஞ்சலி, என்றும் உங்கள் பாடல்கள் எங்களுடன் அன்போடு பேசும். ஆன்மா சாந்தியடையட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.