நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!

நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!

நிர்ணய விலையை மீறி சந்தையில் தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவுள்ளன.

நுகர்வோர் அதிகார சபை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு வெளியிடப்பட்ட தேங்காய்க்கான நிர்ணய விலையை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை மீறி அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் உள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று முதல் அமுலாகும் வகையில் தேங்காய் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலையை 60 முதல்  70 ரூபாவாக  நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

13 அங்குலங்களுக்கு மேல் சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 70 ரூபாவாகும்.

12 முதல் 13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவாகும்.

12 அங்குலத்தை விடவும் குறைந்த சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாகவும் நிரணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருவதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி  தெரிவித்தார்.