பாடகர் எஸ்.பி.பி. சினிமாவில் பாட வரும்போது, சங்கீதத்தை முறையாக கற்கவில்லை. அவர் பாடிய பாடல்கள் முறையான சங்கீதம் கற்றவர்களை விட சிறப்பாக இருந்ததாக இசையமைப்பாளர்கள் வியப்பு தெரிவித்தனர்.
பாடகர் எஸ்.பி.பி. சினிமாவில் பாட வரும்போது, சங்கீதத்தை முறையாக கற்கவில்லை. ஆனால் அவர் பாடிய பாடல்கள் முறையான சங்கீதம் கற்றவர்களை விட சிறப்பாக இருந்ததாக இசையமைப்பாளர்கள் வியப்பு தெரிவித்தனர்.
சங்காரபரணம் படத்தில் எஸ்.பி.பி. பாடிய பாடல்களே இதற்கு உதாரணம். அந்த படத்தில் ஒவ்வொரு பாடலையும் முறையான சங்கீதம் கற்றவர்களை விட எஸ்.பி.பி. சிறப்பாக பாடி இருப்பார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி பாடல்களையும் சுருதி மாறாமல் பாடி அசத்தியவர்.
தமிழிலில் வல்லினம், மெல்லினம் வார்த்தைகளை அதன் அர்த்தம் மாறாமல் உச்சரிக்க தெரிந்தவர். எஸ்.பி.பி. பாட வைத்த இசையமைப்பாளர்கள் இதை பாராட்டி உள்ளனர்.