ஓட்டப்பந்தயத்தால் பறிபோன உயிர்! சம்மாந்துறையில் துயரம்

ஓட்டப்பந்தயத்தால் பறிபோன உயிர்! சம்மாந்துறையில் துயரம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் நிந்தவூர் 4ஆம் பிரிவைச் சேர்ந்த நஜாத்(18) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.