இசையை இழந்த மொழியாய் அழுகிறேன் – வைரமுத்து!
இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் தன் காந்தர்வக் குரலால் ஐம்பது வருட காலம் தனி சாம்ராஜ்யமே நடத்திவந்து, அனைத்து மக்களின் காதுகளையும் குளிர்வித்து, இதயத்தை இதயமாக்கிய எஸ்.பி.பி இன்று நண்பகல் காலமானார்.
இந்நிலையில் அவருக்கு, பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து தனது, ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்குக் கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம் இசையை இழந்த மொழியாய் அழுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
நடிகை நயன் தாரா, “உங்கள் குரல் எப்போதும் எங்களுடனிருக்கும் உங்களுடைய இசைக்காக நன்றி… உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்று தெரிவித்துள்ளார்.