ஐ.நா விற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக சீ ஏ சந்திரபிரேம நியமனம்...!

ஐ.நா விற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக சீ ஏ சந்திரபிரேம நியமனம்...!

8 இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக சீ.ஏ.சந்ரபிரேம நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவும், அமெரிக்காவுக்கான தூதுவராக ரவிநாத் ஆரியசிங்கவும், சீனாவுக்கான தூதுவராக கலாநிதி பாலித்த கோஹணவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானுக்கான இலங்கை தூதுவராக சஞ்சீவ குணசேகரவும், தென்னாபிரிக்காவுக்கான உயர்ஸ்தானிகராக எஸ்.அமரசேகரவும், ஆப்கானிஸ்தான் தூதுவராக வி.பி.ஹரிஸ்சந்ரவும், ஃப்ரான்ஸ் தூதுவராக ஷெனிகா ஹிரிம்புறேகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.