தடம் புரண்டது யாழ் தேவி

தடம் புரண்டது யாழ் தேவி

அனுராதபுரம் - சாலியபுர ரயில் நிலையத்தில் யாழ் தேவி புகையிரதம் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் வடக்கிற்கான ரயில் சேவை தாமதமாகி உள்ளது.